தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-09-13 18:59 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பொது செயலாளர் சடையப்பன், பொருளாளர் பாலகிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழக சங்க செயலாளர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவு, டாஸ்மாக், பொதுத்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். மின்கட்டணம், வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் வரி ஆகியவற்றை உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். அரசு போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிப கழகம், மின்வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்