இரட்டை ஊதிய முறையை அகற்றக்கோரிகூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்

இரட்டை ஊதிய முறையை அகற்றக்கோரி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-10 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் அண்ணா தொழிற்சங்க தலைவர் துரைசாமி, தே.மு.தி.க. தொழிற்சங்க தலைவர் மணி, பணியாளர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், கரும்பு உதவியாளர் சங்கம் பாஸ்கரன், கருனைபூபதி உள்பட 7 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பேசினர். போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் கடந்த 33 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை அகற்றி ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்