தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் நாகல்நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் திண்டுக்கல் நாகல்நகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பொதுச்செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும். நிலுவையில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பயணப்படியை உடனே வழங்க வேண்டும்.
போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.