வர்த்தகர் சங்க கூட்டம்

கீழ்வேளூரில் வர்த்தகர் சங்க கூட்டம்

Update: 2023-07-11 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூரில் வர்த்தகர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர்கள் ரெங்கராஜ், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் கவுரவ தலைவர் பழனிவேல், முன்னாள் செயலாளர் பாபு ஆகியோர் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கீழ்வேளூரில் வர்த்தகர்கள் நடத்தி வரும் கடைகளில் வெளி நபர்களால் அடிக்கடி அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவதால் வணிகர்களுக்கு பாதுகாப்பு வேண்டி கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்து மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வர்த்தக சங்க உறுப்பினர்கள் கடைகளை அடைக்க வேண்டும். வர்த்தக சங்கத்தின் சார்பில் வருகிற 30-ந் தேதி நடைபெறுகின்ற முப்பெரும் விழாவில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்