டிராக்டர் டிரைலர் திருட்டு
டிராக்டர் டிரைலர் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே ராணிசேதுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவர் டிராக்டரை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் தினமும் தனது வீட்டின் அருகே டிராக்டர் மற்றும் டிரைலரை நிறுத்துவது வழக்கம். வழக்கம் போல் நிறுத்தி விட்டு அவர் வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது டிராக்டர் பக்கத்தில் யாரோ நிற்பது போன்று இருப்பதை பார்த்தார். உடனே அவர் மாடியிலிருந்து கீழே வந்து பார்த்த போது டிராக்டர் டிரைலரை காணவில்லை. இதுகுறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.