சிவகாசி,
சாத்தூர் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் சேசப்பன் (வயது 54). இவர் பொதுப்பணித்துறையில் காண்டிரக்டராக இருக்கிறார். தனது வேலைக்கு பயன்படுத்த டிராக்டர் டிரைலர் வாங்கினார். பின்னர் அதனை தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது டிராக்டர் டிரைலரை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சாத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.