டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் பலி

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-05-03 17:10 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் சண்முகம் (வயது 33), லாரி டிரைவர். இவர், மோட்டார் சைக்கிளில் பல்லாந்தாங்கல் அருகே சென்ற போது, ஆரணி நோக்கி வந்த டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்