விஷம் குடித்து டிராக்டர் டிரைவர் தற்கொலை
விஷம் குடித்து டிராக்டர் டிரைவர் தற்கொலை செய்து கொண்டாா்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள ஏரங்காட்டூர் குளத்துக்காட்டை சேர்ந்தவர் ஈஸ்வரி, இவருடைய மகன் மாதன் (வயது 37) டிராக்டர் டிரைவர். திருமணமாகி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி பிரிந்து சென்று விட்டார். அதனால் தாயாருடன் மாதன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக மாதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் தற்கொலை செய்துகொள்ள முடிவுவெடுத்து, நேற்று முன்தினம் விஷம் குடித்துவிட்டார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதன் நேற்று அதிகாலை இறந்துவிட்டார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.