மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; 2 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், கூடுதுறை பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 75). அதே பகுதியை சேர்ந்த மன்மதன் (57). இவர்கள் 2 பேரும் கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் வேலாயுதம்பாளையம்-நொய்யல் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.நடையனூர் இளங்கோ நகர் பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த டிராக்டர் மன்மதன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மன்மதன், வேலுச்சாமி ஆகியோர் படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், டிராக்டர் டிரைவர் நாமக்கல் மாவட்டம் ஆரியூர்பட்டியை சேர்ந்த ரங்கசாமி (57) என்பவர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.