மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
காவேரிப்பட்டணம் அருகே மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.;
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம்-நெடுங்கல் சாலையில் பெரியமுத்தூர் வருவாய் ஆய்வாளர் கமலநாதன் மற்றும் அலுவலர்கள் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிராக்டரை சோதனை செய்தனர். அதில் மண் அள்ளி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அது தொடர்பான புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.