டவுன் பஸ்களை முறையாக இயக்க வேண்டும்
பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் டவுன் பஸ்களை முறையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.
குன்னூர்
பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் டவுன் பஸ்களை முறையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.
டவுன் பஸ்கள்
குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து பெட்போர்டு, சிம்ஸ் பூங்கா, பேரக்ஸ், பிளாக் பிரிட்ஜ், வெலிங்டன், மவுண்ட் பிளசெண்ட் வழியாக குன்னூருக்கு 2 டவுன் (நகர) பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மவுண்ட் பிளசெண்ட், வெலிங்டன், பிளாக் பிரிட்ஜ், பேரக்ஸ், சிம்ஸ் பூங்கா, பெட்போர்டு வழியாக குன்னூர் பஸ் நிலையத்திற்கு 2 பஸ்கள் என மொத்தம் 4 டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணித்து வருகின்றனர். இதனால் பெண்கள் அதிகம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக மாலையில் டவுன் பஸ்கள் முறையாக இயக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படாததாலும், இந்த பஸ்களை பந்துமி பகுதிக்கு இயக்குவதாலும், குறிப்பிட்ட நேரங்களில பெண்கள் உள்பட பயணிகள் பயணம் செய்ய முடியவில்லை.
முறையாக இயக்க வேண்டும்
மேலும் ஒரே நேரத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்படுவதால் பெண்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, டவுன் பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.