குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. கடந்த 3 நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. காலையிலும் மாலையிலும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மதியம் கடுமையான வெயில் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். அனைத்து அருவிகளிலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக குளித்து சென்றனர்.