வார விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து நெரிசலில் திணறிய கொடைக்கானல்

கொடைக்கானல் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.

Update: 2022-09-10 16:32 GMT

திண்டுக்கல்,

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் வாரவிடுமுறை நாட்கள் மற்றும் குளு, குளு சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அதன்படி வார விடுமுறையையொட்டி இன்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட இருமடங்காக அதிகரித்தது.

மேலும் ஓணம் பண்டிகையையொட்டி தற்போது கேரளாவில் இருந்தும் அதிக அளவில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கொடைக்கானல் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.

சுற்றுலா பயணிகள் பைன்மர காடுகள், குணா குகை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களை பார்வையிட்டு ரசித்தும், ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் பொழுதை கழித்தனர். மேலும் விடுமுறை நாட்களில் போக்குவரத்தை சீர்செய்ய கூடுதலாக போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்