வேலூர் கோட்டை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுதந்திர தினத்தையொட்டி வேலூர் கோட்டை பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

Update: 2022-08-15 18:24 GMT

சுதந்திர தினத்தையொட்டி வேலூர் கோட்டை பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

வேலூர் கோட்டை

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. வேலூரில் சுதந்திர போராட்ட வரலாற்றை பறைசாற்றும் இடமாக வேலூர் கோட்டை காணப்படுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் வேலூர் கோட்டைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் கோட்டையை சுற்றிப்பார்த்தனர். பலர் கோட்டை பூங்காவில் பொழுதை கழித்தனர். வழக்கத்தை விட கோட்டை கொத்தளம் மற்றும் வளாகப்பகுதியில் பல இடங்களில் காதல் ஜோடிகள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்திருந்தனர்.

அவ்வாறு வந்தவர்கள் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்றனர். ஆனால் அருங்காட்சியகத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வேலியை தாண்டி...

வேலூர் முன்பு உள்ள கோட்டை பூங்காவுக்கு பலர் சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவர்கள் வேலியை தாண்டி உள்ளே சென்றனர். யாரும் தாண்டாத வகையில் வேலியின் உயரம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. எனினும் பலர் பூங்கா வேலியை தாண்டிச் சென்றனர். சிலர் ஆபத்தை உணராமல் அகழி ஓரமாக சென்றனர். இது போன்ற அவல நிலையை தடுக்க விடுமுறை நாட்களில் கோட்டை பூங்காவை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்