வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.
நீலகிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது குளுமையான காலநிலையோடு சேர்த்து மிதமான மழையும் பெய்து வருகிறது. அங்கு நிலவி வரும் சீதோஷ்ண நிலையை அனுபவித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகின்றனர்.
இதில் வார விடுமுறை நாளான இன்று கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவுவாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.
அங்குள்ள புல்வெளிகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிய ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர்.