புத்தாண்டு விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்; நீண்ட தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்

கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வந்ததால், அங்குள்ள மலைப்பாதைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

Update: 2022-12-31 16:21 GMT

திண்டுக்கல்,

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறைகள் விடப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறைகளும் விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இன்று அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கொடைக்கானலில் நிலவி வரும் ஜில்லென்ற சூழலை அனுபவிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் பலர் தங்கள் சொந்த வாகனங்களில் கொடைக்கானலுக்கு வருவதால், அங்குள்ள மலைப்பாதைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 2 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் வாகனங்கள் மெல்ல ஊர்ந்தபடி மலைப்பாதைகளை கடந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்