குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலம் அருவிகளில் சீசன் முடிந்த பிறகும் தண்ணீர் நன்றாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.;

Update: 2022-09-03 09:56 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இடை இடையே இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.

இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். தற்போது ஆகஸ்ட் மாதம் முடிந்துவிட்டது. சாரல் மழை பெய்யவில்லை. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மலையினால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் அருவிகளில் உற்சாகமாகவும் குளித்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்