கன்னியாகுமரி கடற்கரையில் ஆபத்தை உணராமல் நிற்கும் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி கடற்கரையல் ஆபத்தை உணராமல் நிற்கும் சுற்றுலா பயணிகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

Update: 2022-12-04 19:43 GMT

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி கடற்கரையல் ஆபத்தை உணராமல் நிற்கும் சுற்றுலா பயணிகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் சூரியோதயத்தை பார்த்து விட்டு, கடலி்்ல் குளிப்பார்கள். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு, கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று பார்த்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தின் பின் பகுதி முதல் சன்செட் பாயிண்ட் வரை உள்ள கடல் பகுதி ஆழமான, ஆபத்து நிறைந்த பகுதியாக உள்ளது. அந்த பகுதியில் கடலில் இறங்கக் கூடாது என்பதற்காக கடற்கரையையொட்டி பாறாங்கற்களை குவித்து தடுப்புச் சுவர்கள் அமைத்து உள்ளனர்.

ஆபத்தை உணராமல்...

ஆனால் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அந்த தடுப்புச்சுவர்களையும் தாண்டி சென்று கடலில் இறங்க முயற்சிக்கின்றனர்.

அந்த பகுதியில் இறங்கினால் ஆபத்து என்பதால், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள் சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்