வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-07-16 21:00 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் வாரவிடுமுறை தினத்தையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதில் குறிப்பாக பயணிகள் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை மற்றும் நகரில் உள்ள பல்வேறு பூங்காக்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கை அழகினை கண்டு ரசித்தனர்.

மேலும் மலைப்பகுதியில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டத்தின் அழகை பார்த்த அவர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தனர். நேற்று குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. பகல் நேரத்தில் சுமார் அரை மணி நேரம் பெய்த சாரல் மழையில் நனைந்து உற்சாகம் அடைந்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்