சோலையாறு அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையொட்டி சோலையாறு அணையை ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-05-11 18:45 GMT

வால்பாறை

கோடை விடுமுறையொட்டி சோலையாறு அணையை ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கோடை விடுமுறை

கோவை மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக வால்பாறை விளங்குகிறது. இங்கு கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி விடுமுறை விடப்பட்டு உள்ளதால், குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவர்கள் சோலையாறு அணை, கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை, வெள்ளமலை டனல் உள்ளிட்ட பகுதிகளை ரசித்து வருகின்றனர்.

சோலையாறு அணை

இந்தநிலையில் நேற்று வால்பாறை அருகில் உள்ள சோலையாறு அணையை காண அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

ஆனால் சோலையாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் மதகு பகுதி வரை சென்று பார்த்து விட்டு வர அனுமதி வழங்கப்படுவது இல்லை. தற்போது அணையின் மேல் பகுதியில் கேட் அமைத்து மதகு பகுதி வரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவில் மிக உயரமான அணை என்பதால் மதகு வரை செல்ல அனுமதி வழங்கி சுற்றுலா பயணிகளுக்கு அணையின் சிறப்பு தன்மைகள் குறித்து எடுத்துக்கூறுவதற்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்