குற்றாலத்தில் புத்தாண்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்-அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்
குற்றாலத்தில் புத்தாண்டு தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் புத்தாண்டு தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
அருவிகளில் நீர்வரத்து
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினாலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையினாலும் அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது.
இடையில் சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது.
புத்தாண்டில் குவிந்தனர்
நேற்று புத்தாண்டு தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைத்து அருவிகளிலும் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளுக்கு வந்திருந்தனர். அவர்களும் அருவிகளில் குளித்து விட்டு சென்றனர்.