ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-07-03 22:16 GMT

ஏற்காடு:

சுற்றுலா பயணிகள்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினமும் தமிழகம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் ஏற்காட்டுக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

படகு சவாரி

மேலும் சுற்றுலா தலங்களான லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ேராஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையை கண்டு ரசித்தனர்.

ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் சூழல் ஏற்பட்டது, இதனால் வேறு வழி இன்றி காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனிடையே நேற்று ஏற்காட்டில் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் குளிர்ந்த கால நிலை நிலவியது. இது சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்