குரங்குநீர்வீழ்ச்சி, டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சி, டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Update: 2023-01-17 18:45 GMT

பொள்ளாச்சி

பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சி, டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

ஆழியாறு அணை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

அங்கு பெண்கள், குழந்தைகள் என அனைவரும் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டு காணும் பொங்கலை கொண்டாடினர்.

மேலும் குழந்தைகள் பூங்கா பகுதியில் ஓடும் நீரோடையில் குளித்து மகிழ்ந்தனர். சிலர் அணை பகுதியில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அணைக்குள் அத்துமீறி இறங்கிய சுற்றுலா பயணிகளை பொதுப்பணித்துறை ஊழியர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

குரங்கு நீர்வீழ்ச்சி

சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பூங்காவிற்கு செல்ல டிக்கெட் எடுத்தனர். இதன் காரணமாக வால்பாறை ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட் டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

எனவே அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஆழியாறு போலீசார் ஈடுபட்டனர். அணையில் படகு சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

டாப்சிலிப்

இது போல் டாப்சிலிப்பிற்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

கடந்த 4 நாட்களில் மட்டும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு 6 ஆயிரம் பேரும், டாப்சிலிப்பிற்கு 3800 பேரும் வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்