பூலாம்பட்டியில் படகு சவாரி செய்ய குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினமான நேற்று பூலாம்பட்டியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-10-09 21:01 GMT

எடப்பாடி:

படகு சவாரி

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் காவிரி கதவணை பகுதியில் விசைப்படகு சவாரி செய்தும், அணையில் குளித்தும் மகிழ்ந்தனர். மேலும் இந்த பகுதியில் உள்ள அணை பாலம், நீர்மின் நிலையம், நீருந்து நிலையம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் பூலாம்பட்டி அணைப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான விசைப்படகுகள் இயக்கப்பட்டன.

வணிகர்கள் மகிழ்ச்சி

மேலும் பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில், காவிரித்தாய் சன்னதி, நந்திகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பவுர்ணமியையொட்டி, அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி வணிகர்கள் மற்றும் வாடகை வாகன டிரைவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்