கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்;

Update: 2022-10-06 18:45 GMT


கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரப் பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்த கனமழை காரணமாக, கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து மழை குறைந்ததால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்.

ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்துக்கு வந்து குவிந்தனர். அவர்கள் அங்கு உள்ள அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

அதில் ஆயுதபூஜையன்று மட்டும் 965 பெரியவர்களும், 198 குழந்தைகளும் என 1,163 சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்