திற்பரப்பில் குளுமையான சூழலை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள்

சாரல் மழையுடன் திற்பரப்பில் கடந்த 2 நாட்களாக குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Update: 2023-06-18 18:45 GMT

திருவட்டார்:

சாரல் மழையுடன் திற்பரப்பில் கடந்த 2 நாட்களாக குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குளு, குளு சீசன்

கடந்த 2 நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் திற்பரப்பில் குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.

மேலும் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் உல்லாச படகு சவாரி செய்ததையும் காணமுடிந்தது. அப்போது உற்சாக மிகுதியில் 'செல்பி' படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதி கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்