கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

Update: 2023-05-14 22:10 GMT

கடத்தூர்

கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையில் இருந்து அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். எனவே இங்கு குளிப்பதற்காக ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதையடுத்து தாங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்