கொடிவேரி அணைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை
அதிக அளவு உபரி நீர் வெளியேறுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது;
ஈரோடு,
கடத்தூர் கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கரூர், கோவை மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்வார்கள். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள்.
இந்த நிலையில் கொடிவேரி அணைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதிக அளவு உபரி நீர் வெளியேறுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,கொடிவேரி அணை பகுதியில் பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.