திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தண்ணீர் அதிக அளவில் வருவதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவட்டார்,
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளில் தண்ணீர் அதிக அளவு வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அனையில் இருந்து மறுகால் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால், தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். அவர்கள் அருவியில் குளிக்காமல் வெளியில் இருந்து அருவியை சுற்றி செல்கிறார்கள்.
திற்பரப்பு பேரூராட்சி சார்பாக ஊழியர்கள் தடை உத்தரவு போட்டு இருக்கிறார்கள். ஆறு குளங்களில் தண்ணீர் அதிக அளவு ஆர்பரித்து வருகிறது.