பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-07-09 19:44 GMT

எடப்பாடி

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ள பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு, நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில், சேலம் மாவட்டம் பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும் உள்ளூர் சுற்றுலா தலமான இப்பகுதிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இந்தநிலையில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீர்மின் நிலையம், கதவணைப்பாலம், நீறேற்று நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் அணைப்பகுதியில் விசைப்படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்