மலைப்பாதையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-05-14 19:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

சுற்றுலா வேன்

சென்னை பூந்தமல்லியில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் குடும்பத்துடன் கடந்த 12-ந் தேதி வேனில் சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளித்து விட்டு, காலை 10 மணிக்குகோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் சென்று கொண்டு இருந்தனர்.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள குறுகிய வளைவில் டிரைவர் பிரேக் போட முயற்சித்தார். ஆனால் பிரேக் பிடிக்காததால் அவரது கட்டுப்பாட்டை வேன் இழந்தது.

முதலுதவி சிகிச்சை

இதைத்தொடர்ந்து சாலையோர மண் திட்டின் மீது வேன் மோதி மலைப்பாதையில் கவிழ்ந்தது. உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் வேனில் இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டு இருந்தது. அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்