சிறுவனின் உடலில் சூடு வைத்து சித்ரவதை; பெயிண்டர் கைது

எரியோடு அருகே சிறுவனின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-18 21:00 GMT

எரியோடு அருகே உள்ள புங்கம்பாடியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளான். லோகநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் முத்துலட்சுமி, மகனுடன் அப்பகுதியை சேர்ந்த தனது உறவினரும், பெயிண்டருமான மணிகண்டன் (வயது 23) என்பவரது வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் மணிகண்டன், லோகநாதனின் மகனை தனியாக அழைத்து சென்று சூடு வைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார். அதன்படி, கடந்த 17-ந்தேதி மணிகண்டன், அந்த சிறுவனுக்கு சூடு வைத்தார். அப்போது அந்த சிறுவன் வலியால் கதறி அழுதான். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து அறிந்த சிறுவனின் தாய் முத்துலட்சுமி, எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்