தரகம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு சுமார் அரைமணி நேரம் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.