பாளையங்கோட்டையில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு ஜோதி ஓட்டம்

வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டையில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு ஜோதி ஓட்டத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-12 19:59 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய விழாவையொட்டி நேற்று பாளையங்கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை முன்பு இருந்து புனித நீர் மற்றும் தொடர் ஜோதி ஓட்டப்பேரணி நடந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ சிலைக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து புனித நீர் மற்றும் ஜோதி ஓட்டத்தை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் தொண்டர் படை தலைவர் விநாயகர், செயலாளர் வீரபெருமாள், துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், மாவட்ட துணை செயலாளர் தர்மன், மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜோதி ஓட்டத்தையொட்டி நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்