கல்லக்குடி, தின்னக்கோணம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
கல்லக்குடி, தின்னக்கோணம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
முசிறி:
முசிறி கோட்டத்தில் உள்ள குணசீலம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் குணசீலம், அய்யம்பாளையம், ஏவூர், ஆமூர், வாத்தலை, மாங்கரைப்பேட்டை, கொடுந்துறை, மணப்பாளையம், தின்னக்கோணம், நாச்சம்பட்டி, வீரமணி பட்டி, சித்தாம்பூர், நெய்வேலி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புள்ளம்பாடி, கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், முதுவத்தூர், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணணூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, கல்லகம், கீழரசூர், ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், குமுளுர், தச்சங்குறிச்சி, புஞ்சைசங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், விளாகம், குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, டி.கல்விகுடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.