திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-17 16:29 GMT

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் நகரம், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று திண்டுக்கல் மின்சார வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி துணை மின்நிலையத்தில், நாளை சிறப்பு பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி பாப்பம்பட்டி, லட்சுமாபுரம், குதிரையாறு அணை, கிருஷ்ணாபுரம் மற்றும் தாதநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று பழனி மின்சார வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

நிலக்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலீநாயக்கன்பட்டி, சுட்டிக்காலடிப்பட்டி, அவையம்பட்டி, மணியகாரன்பட்டி, பங்களாபட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று வத்தலக்குண்டு மின்சார வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நல்லமனார்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி குளத்தூர், சூடாமணிப்பட்டி, காலனம்பட்டி, புலியமரத்துப்பட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்டை, கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், எஸ்.ஜி.பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்