திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-12 13:55 GMT

சென்னை,

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூரில் பெய்த மழையால் பள்ளிகளுக்கு இன்று மதிய 3 மணி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளித்தும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்