கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 டன் தக்காளி வந்திருந்தது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய் வரைக்கும் ஏலம் போனது. ஆனால் நேற்று 11 ரூபாய்க்கு ஏலம் போனது. கிலோவிற்கு 4 ரூபாய் குறைவாக விற்பனையானதால், விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் கடைகளில் கிலோ 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மற்ற காய்கறி, பழங்கள் விைல நிலவரம் வருமாறு(கிலோ):
கத்தரிக்காய் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.55, அவரைக்காய் ரூ.25, பீட்ரூட் ரூ.14, வெண்டைக்காய் ரூ.50, பாகற்காய் ரூ.35, பீக்கங்காய் ரூ.40, தேங்காய் ரூ.20, நேந்திரம் ரூ.22, கேரள கதலி ரூ.40, செவ்வாழை(தார்) ரூ.1,200, ரஸ்தாலி(தார்) ரூ.450, பூவன்(தார்) ரூ.400-க்கு ஏலம் போனது.