தக்காளி விலை வீழ்ச்சி

பழனி பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்தது.

Update: 2022-07-21 16:06 GMT

பழனி தாலுகா பாப்பம்பட்டி, கரடிக்கூட்டம், அய்யம்பாளையம், காவலப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தோட்டங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவை விற்பனைக்காக பழனி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் சில வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாகவும் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது பழனி பகுதியில் தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால், அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து விட்டது. எனவே சரக்குவேன்களில் வைத்து நேரடியாக வீதி, வீதியாக சென்று தக்காளிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்