சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை ரூ.5 குறைவு..!

தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.;

Update: 2023-08-17 02:42 GMT

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.200வரை விற்கப்பட்டது. இதனால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியை குறைந்த அளவே பயன்படுத்தும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை ரூ.5 குறைந்து, ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று ரூ.35-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்