சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைவு..!

சென்னை, கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

Update: 2023-08-03 04:03 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி வரலாறு காணாத வகையில் விலை உயர்வை சந்தித்தது. ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அந்த வகையில் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளியை மார்க்கெட் விலையைவிட குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. நேற்று ரூ.160-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி, இன்று ரூ.10 குறைந்து ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2-ம் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்