தக்காளி விலை உயர்வு

செங்கத்தில் தக்காளி விலை உயர்ந்தது. கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-07-02 13:21 GMT

செங்கம்

செங்கம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் தக்காளியின் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்