சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்கு ஊதும் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்கு ஊதும் போராட்டம்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் 28 பேர் கடந்த 20 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுங்கச்சாவடியில் தற்போது பணிபுரிந்து வரும் பயணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த மனுவின் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கு ஊதி கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.