இன்றைய தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.56 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.;

Update: 2022-07-05 05:08 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் கடந்த கடந்த 1ஆம் தேதியிலிருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் 5-வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7 உயர்ந்து ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.700 உயர்ந்து 64,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்