திருவாரூர்;
திருவாரூர் நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருவாரூர் நகர துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்தும், கப்பல் நகர் துணை மின் நிலையத்திலிருந்தும் மின்வினியோகம் பெறும் திருவாரூர் தெற்கு வீதி, பனங்கல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகுந்தனூர், திருப்பயத்தங்குடி, மாவூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதைப்போல அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் அடியக்கமங்கலம், ஈ.பி. காலனி, சிதம்பரநகர், பிலாவடி மூலை, ஆந்தகுடி, அலிவலம், புலிவலம் தப்பளாம்புலியூர், புதுபத்தூர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்து உள்ளனர்.