இன்றைய மாணவர்கள் நாளைய முதியவர்கள் - அமைச்சர் கீதா ஜீவன்

இன்று உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2022-06-15 05:50 GMT

சென்னை:

உலக அளவில் வாழும் பெருவாரியான முதியோர் உடல் மற்றும் மனரீதியிலான வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனை முன்னிறுத்தி முதியோர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு ஜூன் 14, 2006-ல் உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளை அறிவித்தது.

முதியோரை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஜீன் 15-ம் தேதியானது முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று சமூக நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது, இன்றைய மாணவர்கள் நாளைய முதியவர்கள் ஆகையால் முதியோர்களுக்கு உதவி செய்வது ஒவ்வொரு மாணவர்களின் கடமை என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்