ராபி பருவ நெல் தரிசில் பருத்தி, கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ராபி பருவ நெல் தரிசில் பருத்தி, கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய இன்று (31.03.23) கடைசி நாள் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-30 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் ராபி பருவ நெல் தரிசில் பருத்தி, கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய இன்று (31.03.23) கடைசி நாள் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று கடைசி நாள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சை பயறு, பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்பு அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

தற்போது அறிவிக்கை செய்யப்பட்ட நெல் தரிசில் பருத்தி, கரும்பு ஆகிய பயிர்களுக்கான விவசாயிகள் பதிவு நடைபெற்று வரும் நிலையில், காப்பீடு செய்ய இன்று (31.3.2023) கடைசி நாள்.

காப்பீடு

விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காப்பீடு தொகை செலுத்தி அதற்கான இரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

பயிர் காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு, நெல் தரிசில் பருத்திக்கு ரூ.15 ஆயிரத்து 894-ம், கரும்புக்கு ரூ.52 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு நெல் தரிசில் பருத்திக்கு ரூ.795-ம், கரும்புக்கு ரூ.2 ஆயிரத்து 600-ம் விவசாயிகள் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் பயன்பெறலாம்

எனவே, விவசாயிகள் அருகிலுள்ள பொதுச்சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உரிய காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி நெல் தரிசில் பருத்தி மற்றும் கரும்பு பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்