திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-12-08 18:45 GMT

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

புயல் எச்சரிக்கை

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கரையைக் கடக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து புயல், கனமழை முன்எச்சரிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நேற்று காலை முதல் மிதமான சாரல் மழையானது விட்டு, விட்டு பெய்து வருகிறது. மேலும் கடுமையான குளிர் காற்று வீசி வருகிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டனர். புயல், கனமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்