ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், தற்போது வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுமுறை அறிவித்துள்ளார்.