பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
புயல்காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
'மாண்டஸ்' புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதைத்தொடர்ந்து மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர்கள் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.